பொருநை
பொருநை கரையில் அமைந்திருக்கும் கொற்கை இடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் புகழ்பெற்ற துறைமுகமாகவும் இருந்திருக்கிறது.
கொற்கை கோநகர் இடைச்சங்கத்தை எடுப்பித்து வளர்த்தது
இடைச்சங்கத்தை நிறுவிய வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 79 பாண்டியர்களின் ஆட்சி நகரமாக இருந்தது கொற்கை
கொற்கையை கொல்சிஸ் , கொல்காய் என்று தாலமி , பிளினி , மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவர் குறிப்பிடுகின்றனர்
கிரேக்கம் , எகிப்து , அரேபியா போன்ற நாடுகளை சேர்ந்த கடல்வழி வணிகர்களுக்கு மிகப்பெரிய வணிக தளமாக விளங்கியிருக்கிறது
கீழடியில் சூரியன் , நிலவு போன்ற வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு கண்டெடுக்கப்பட்டது
அதை ஆய்வு செய்த நாணயவியல் நிபுணரும், கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியருமான சுஷ்மிதா பாசு பசும்தார் , இந்த காசு கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே , அதாவது மவுரிய பேரரசர் அசோகர் காலத்துக்கும் முற்பட்டது என்று கருத்து தெரிவித்தார்
கரிம பகுப்பாய்வு முடிவுகளின்படி கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது
முந்தைய அகழாய்வுகளில் கிடைத்த கரிம பகுப்பாய்வுகளின் முடிவுகளின் படி கி.மு. 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே கொற்கை ஒரு துறைமுகமாக செயல்பட்டு வந்திருக்கிறது
இப்பொது நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணம் கொண்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன
இவை கங்கை சமவெளியை சார்ந்தவை
இவற்றை ஆராய்ந்த நிபுணர்கள் , கொற்கை துறைமுகம் 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பே வெளிநாடுகளுடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்
ஆதிச்சநல்லூர் அருகே சிவகளை பறம்பு பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
இதில் உமி நீங்கிய நெல்மணிகள் இருந்தன
முறையில் ஆய்வு செய்தபோது அந்த நெல்மணிகள் காலம் கி.மு.1155 என்று தெரிய வருகிறது
இதன்மூலம் " தண்பொருநை " என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கும் முற்பட்டது ஆகும்
பொருநை நாகரிகம்- DOWNLOAD PORUNAI REPORT

Install Athiyaman App
ORDER TNPSC GROUP 2 2A Group 4 BOOKS

No comments:
Post a Comment