சாகித்ய அகாடமி விருதுகள்
சாகித்திய அகாடமி இந்தாண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான பால சாகித்ய விருது சிறுவர் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் படைப்பாளிகளுக்கான யுவ புரஸ்கார் கவிஞர் ப.காளிமுத்துவுக்கு 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இமையம் ஆங்கில நூலுக்குக் கூட்டம்
எழுத்தாளர் இமையத்தின் 'If There is a God' ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்து சென்னை சர்வதேச மையம் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளது. இன்று (27, ஆகஸ்ட்) மாலை 6 மணிக்கு கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்துக்குப் பின்னால் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment